காரிய சித்தி மாலை
இடர்கள் முழுதும் எவனருளால்
எரி வீழும் பஞ்சென மாயும் .
தொடரும் உயிர்கள் எவனருளால்
சுரர் வாழ் பதியும் உறச் செய்யும்.
கடவுள் முதலோர்க் கூறின்றிக்
கருமம் எவனால் முடிவுறும் அக்
கடவுமருப்புக் கணபதி பொன்
சரணம் சரணம் அடைநின்றாம்
செய்யும் வினையின் முதல் யாவன்
செய்யப்படும் அப்பொருள் யாவன்
ஐயம் இன்றி உளதாகும்
அந்தக் கருமப்பயன் யாவன்
உய்யும் வினையின் பயன் விளைவில்
ஊட்டிவிடுப்பான் எவன் அந்தப்
பொய்யில் இறையைக் கணபதியைப்
புரிந்து சரண் அடைகின்றோம் .
பாச அறிவில் பசு அறிவில்
பற்றற்கரிய பரன் யாவன்
பாச அறிவும் பசு அறிவும்
பயிலப்பணிக்கும் அவன் யாவன்
பாச அறிவும் பசு அறிவும்
மாற்றி மேலாம் அறிவான
நேசன் எவன் அக்கணபதியை
திகழச் சரண் அடைகின்றோம்.
The above chant on Vigneswara or Ganesha, is in Tamil and it is believed that when you chant it daily, with Bhakti (devotion) and Faith, at least 11 times, your wishes may be fulfilled soon.